தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரைவு ரயில் தீப்பிடித்தது; பயணிகள் உயிர் தப்பினர்

1 mins read
00c8252a-a97c-4dc8-9f35-aad5445d05e2
ஹைதராபாத் அருகே பொம்மைப்பள்ளி, பகிடிப்பள்ளி இடையே சென்றபோது திடீரென்று தீப்பிடித்துக்கொண்ட விரைவு ரயில். - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: மேற்கு வங்காள மாநிலம் அவுராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்குப் புறப்பட்டுச் சென்ற பலக்னுமா விரைவு ரயில் வெள்ளிக்கிழமை நண்பகல் நேரத்தில் ஹைதராபாத் அருகே பொம்மைப்பள்ளி, பகிடிப்பள்ளி இடையே திடீரென்று தீப்பிடித்துக்கொண்டது.

உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர். யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்