40 ஆண்டு காணாத கனமழை, அரசு ஊழியர்களின் விடுப்பு ரத்து

1 mins read
765e003c-8443-4312-8783-b774327ec8cd
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 153 மி.மீ. மழை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: தினத்தந்தி

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்ததால், அனைத்து அரசுத் துறை ஊழியர்களின் விடுமுறையையும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ரத்து செய்து உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு வானிலை ஆய்வகம் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 24 மணிநேரத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 153 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது,” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கனமழையால் டெல்லிவாசிகள் மிகவும் சிரமத்தை எதிர்கொள்வதாகக் கூறப்பட்டது.

” மொத்த பருவகால மழையில் 15 விழுக்காடு 12 மணிநேரத்தில் பெய்துள்ளது. மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். அனைத்து அமைச்சர்களும் டெல்லி மேயரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வார்கள். அரசாங்க அதிகாரிகள் அனைவரும் ஞாயிறு விடுமுறையை ரத்து செய்து, உடனடியாக களத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது,” என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்