தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலி தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்ற இளைஞர்கள் கைது

1 mins read
21b00f21-4197-4b0d-9cc3-86ef11bbb313
படம்: - தமிழ் முரசு

திருப்பதி: இந்தியாவில் தயார்செய்யப்படும் தொலைக்காட்சிப் பெட்டிகளில் உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்களை அச்சிட்டு திருப்பதியில் விற்பனை செய்து வந்த இளைஞர்கள் இரண்டு பேரை காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் திருப்பதியில் ஒரு காவல்நிலையத்தின் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை இரண்டு பேர், வாகனம் ஒன்றில் போலி தொலைக்காட்சிப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு திருப்பதி மலையில் உள்ள ஜிஎன்சி சோதனைச் சாவடிக்கு வந்தனர். அப்போது திருப்பதி ஆலய அதிகாரிகள், அந்த வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டபோது, அதில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தது தெரியவந்தது.

முன்னதாக இருந்த இரண்டு சோதனை சாவடிகளைத் தாண்டி அவர்கள் மலை மீது எப்படி தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொண்டு வந்தனர் என சந்தேகமடைந்த அந்த அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை அழைத்து அவர்களிடம் அந்த ஆடவர்களை ஒப்படைத்தனர்.

விசாரணையில், முகமது ஆசிப், ஷெஹனாஸ் என்ற அந்த ஆடவர்கள் இருவரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் உள்ளூர்த் தயாரிப்புத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் பிரபல நிறுவனங்களின் பெயர்களை அச்சிட்டு பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்