டெல்லி ரயில்களில் பெண்மணிகள் நடனமாடும் போக்கு பிரபலமடைந்து வரும் ஒன்று. ரயில்களில் பயணம் செய்வோர் அப்பெண்மணிகள் நடனமாடுவதை ‘ரீல்ஸ்’ அல்லது காணொளிகளாக படம்பிடிப்பதை கண்டுள்ளனர்.
இந்த காணொளியில், சீமா கனொஜியா டெல்லி மெட்ரோ ரயிலில் லதா மங்கேஷ்கர், உதித் நாராயண் பாடிய ‘அந்தேகி’ பாடலுக்கு நடமாடுவதைக் காணலாம். நகர்ந்து வரும் ரயில், ரயில் நிலையத்தை அடைந்த பிறகும் இவர் தொடர்ந்து நடனமாடுவது சிலருக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.
டெல்லி மெட்ரோவில் பயணம் செய்யும் பலரோ இம்மாதிரியான காணொளிகளை புறக்கணித்தாலும், இவற்றைப் பற்றி இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் மக்கள் நகைச்சுவையான கருத்துக்களையும் அவர்களுடைய எரிச்சலை காட்டும் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.
“டெல்லி மெட்ரோ இப்போக்கினை கண்காணிக்க வேண்டும்,” என்று ஒரு பயணி கூறினார்.
இன்னொரு பயணி, “டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் இம்மாதிரியான மக்களை எப்போது கண்டிக்கும்? இவர்கள் மற்ற பயணிகளை தொந்தரவு செய்வது மட்டுமல்லாமல் மெட்ரோ ரயில் சேவையை அவமதிக்கின்றனர்,” என்றார்.
டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் இதுபோன்ற காணொளிகள் எடுப்பதைப் பற்றி பலமுறை எச்சரிக்கையளித்துள்ளது. இந்த எச்சரிக்கைகளைக் காட்டிலும் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய இக்காணொளி படப்பிடிப்புகளில் பங்கேற்கின்றனர்.