பாஜகவை வீழ்த்த வியூகம்; எதிர்க்கட்சிகள் ஆலோசனை

பாஜகவை வீழ்த்த வியூகம்; எதிர்க்கட்சிகள் ஆலோசனை

1 mins read
74bbe10a-65b3-4c99-998d-a9b5c31d75df
ராகுல் காந்தியுடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். - படம்: ஊடகம்

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்துடன் எதிர்வரும் 17ஆம் தேதி பெங்களூரில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.

அதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தில் 16 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற நிலையில், பெங்களூருவில் நடக்கும் கூட்டத்தில் 24 கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பாக பொது வேட்பாளரை களமிறக்குவது குறித்து மீண்டும் ஆலோசிக்கப்படும் என்றும் இரண்டு நாள்கள் இந்தக்கூட்டம் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், மிக விரைவில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அடையாளம் காண வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் முனைப்பாக உள்ளன.

எனினும், காங்கிரசுடன் இணைந்து செயல்பட சில எதிர்க்கட்சிகள் தயங்குகின்றன. அந்த தயக்கம் களையப்படும் பட்சத்தில் பாஜகவுக்கு எதிரான பலமாக எதிர்க்கட்சிக் கூட்டணி உருவாகும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றன.

குறிப்புச் சொற்கள்