முட்டுக்கட்டை போட்ட மழை: இணையம் வழி இணைந்த ஜோடி

முட்டுக்கட்டை போட்ட மழை: இணையம் வழி இணைந்த ஜோடி

1 mins read
326f61ee-124e-487a-bf7d-02d1c49590de
திருமண நிகழ்வு இனிதே நடந்தேறியது. - படம்: ஊடகம்

சிம்லா: கனமழை காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதை அடுத்து இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரு திருமண ஜோடி இணையம் மூலம் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த சில நாள்களாக அம்மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் சிம்லாவைச் சேர்ந்த ஆசிஷ் சிங்கா என்பவருக்கும் குலு பகுதியைச் சேர்ந்த ஷிவானி என்ற பெண்ணுக்கும் செவ்வாய்க்கிழமை திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் கனமழை காரணமாக மணமகன் ஆஷிஷ் சிங்காவால் குலு பகுதிக்குச் செல்ல முடியவில்லை. இதனால் திருமணம் தடைபட்டது.

தற்போது பெய்து வரும் கனமழையால் அதிகமான சேதங்களை எதிர்கொண்ட பகுதிகளில் குலுவும் ஒன்று. இதனால் மணமக்கள் மனமுடைந்த நிலையில், அவர்களது உறவினர்கள் மாற்று ஏற்பாட்டைச் செய்தனர்.

அதன்படி காணொளி மூலம் திருமணத்தை நடத்த முடிவானது. இரு தரப்பு உறவினர்களும் காணொளியில் ஒன்று சேர்ந்தனர்.

“இந்த மாற்று ஏற்பாடானது ஆகச் சிறந்த வழி. திருமணம் நடைபெற்றது என்பதுடன் அனைவரும் பாதுகாப்பாக இருந்தபடி மணமக்களை வாழ்த்தினர்,” என்று ஆஷிஷ் குடும்பத்தார் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்