கணவர் சமையலுக்கு தக்காளி பயன்படுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி

1 mins read
565ba2f1-22ad-4c66-852b-331c64f30d6b
சஞ்சீவ் பர்மன், அவரது மனைவி - படம்: இந்திய ஊடகம்

மத்திய பிரதேசம் மாநிலம் ஷாஹ்டால் மாவட்டத்தில் சிற்றுண்டி கடை நடத்தி வரும் சஞ்சீவ் பர்மன், சமையலுக்கு தனது மனைவியை கேட்காமல் இரண்டு தக்காளியை பயன்படுத்தியுள்ளார். தக்காளி விற்கும் விலைவாசிக்கு என்னிடம் கேட்காமல் எப்படி இரண்டு தக்காளியை சமையலுக்கு பயன்படுத்துவீர்கள் என்று கோபடைந்துள்ளார். வாக்குவாதம் முற்ற, அவர் தனது மகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். எங்கு தேடியும் மனைவி, மகள் கிடைக்காததால் உள்ளூர் காவல் நிலையத்தில் சஞ்சீவ் புகார் அளித்தார். காணாமல் போன மனைவி, மகளை கண்டுபிடித்து ஒப்படைப்பதாக சஞ்சீவிடம் காவல் துறை உறுதியளித்து அனுப்பி வைத்தனர்.

குறிப்புச் சொற்கள்