ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காரவுலி மாவட்டத்தில் உள்ள கிணற்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட 18 வயது பெண், கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்குப் பிறகு அமிலம் ஊற்றி கொல்லப்பட்டிருக்கலாம் என்று பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பெண்ணின் குடும்ப உறவினர்களும் இதற்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக பெண் சடலம் வைக்கப்பட்டிப்பட்டிருந்த மருத்துவமனைக்கு முன்பு குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களும் பாஜக பிரமுகர்களும் குற்றவாளிகளை கைது செய் என்று முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கிரோடி லால் மீனாவும் பங்கேற்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய மீனா, கடத்தி, கற்பழித்துவிட்டு இளம் பெண்ணை கொலை செய்துவிட்டார்கள் என்று கூறினார்.
இந்த நிலையில் குற்ற[Ϟ]வாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள குடும்பத்தினர், ஐம்பது லட்ச ரூபாய் இழப்பீட்டை அரசாங்கம் தர வேண்டும் என்றும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசாங்க வேலை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
டோடாபிம் வட்டாரத்தின் மோஹன்பூராவைச் சேர்ந்த பெண் புதன்கிழமை அன்று காணாமல் போனதாக அவ்வட்டார குடியிருப்பாளரான நாடாவ்டி எஸ்எச்ஓ பாபு லால் சொன்னார்.
ஜெய்ப்பூர் பாஜக எம்பியான ராஜ்யவர்தன் ராத்தோர், சம்பவம் பற்றி கேள்வியுற்று மனமுடைந்து போனதாகத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“அமிலம் ஊற்றி எரித்த பிறகு தலித் பெண்ணை கிணற்றில் வீசிவிட்டனர். காங்கிரஸ் கட்சி ஆளும் இந்த ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று,” என்று அவர் கூறினார்.

