திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் மலைப்பகுதியில் விலைமதிப்புமிக்க செம்மரங்களை வெட்டி கடத்தும் சட்டவிரோத செயல் கடந்த 30 ஆண்டுகளாகவே நடந்து வருகிறது.
செம்மரங்கள் கடத்தலைத் தடுக்க சிறப்புப் படைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பிரிவினர், அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள இஞ்ச தும்லா வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக ஐவரைக் கைது செய்தனர்.
இதேபோல சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள பீலேரு பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தி வந்த 20 பேர் கொண்ட கும்பலும் பிடிபட்டது.
பிடிபட்ட அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து 19 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

