அரசு தலையிட்டு தக்காளி விலையைக் குறைத்தது

அரசு தலையிட்டு தக்காளி விலையைக் குறைத்தது

1 mins read
91465b13-4ac3-4d8e-b09b-4e62954552fc
 தேசிய நெடுஞ்சாலை சுற்றுக்காவல் அதிகாரிகள் விரைந்து வந்து லாரியை சுற்றி நின்று தக்காளியைப் பொதுமக்கள் எடுத்துச் செல்லாதவாறு பார்த்துக்கொண்டனர். - படம்: இந்திய ஊடகம

புதுடெல்லி: இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தக்காளி விலை உயர்ந்து பரபரப்பானது. உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.250 வரை சென்றது. தலைநகர் டெல்லியில் விலை ரூ.200க்கு உயர்ந்தது.

இந்த நிலையில். தக்காளியை மானிய விலையில் கிலோ ரூ.80க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. டெல்லி, நொய்டா, லக்னோ, கான்பூர், வாரணாசி, பாட்னா, முசாபர்பூர், அராஹ் ஆகிய இடங்களில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தக்காளி ரூ.80க்கு ஞாயிறு முதல் விற்பனையாகிறது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து 638 பெட்டிகளில் 16 டன் எடையுள்ள தக்காளியை ஏற்றிக் கொண்டு டெல்லியை நோக்கிச் சென்ற ஒரு லாரி தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் மாவாள மண்டல் ஹைதராபாத், நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

தக்காளிப் பெட்டிகள் சாலையில் விழுந்தன. இதனைக் கண்ட அந்த பகுதி மக்கள் சாலையில் விழுந்து கிடந்த தக்காளிகளை எடுத்துச் செல்ல முயன்றனர்.

என்றாலும், தேசிய நெடுஞ்சாலை சுற்றுக்காவல் அதிகாரிகள் விரைந்து வந்து லாரியை சுற்றி நின்று தக்காளியை பொதுமக்கள் எடுத்துச் செல்லாதவாறு பார்த்துக்கொண்டனர். பின்னர் மாற்று லாரியில் தக்காளிப் பெட்டிகள் ஏற்றி அனுப்பப்பட்டன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்