இம்பால்: மணிப்பூரின் இம்பால் ஈஸ்ட் மாவட்டத்தில் ஜூலை 15ஆம் தேதி ஒரு மாது அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் தொடர்பில் ஐந்து பெண்கள் உட்பட ஒன்பது பேர் ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கொடூரமான கொலை இம்பால் ஈஸ்ட் மாவட்டத்தில் உள்ள சாவோம்பங் வட்டாரத்தில் நடந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்தது.
சனிக்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்ட மாதின் உடல் அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. ஐம்பது வயதுகளில் இருந்த பெண்ணின் முகத்தில் சுடப்பட்டுள்ளது. பின்னர் அவரது முகத்தை சிதைத்துவிட்டு குற்றவாளிகள் தப்பியோடிவிட்டனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு ஆயுதங்கள், துப்பாக்கி, கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.