எரிசக்தி துறையில் மாற்றம்: இந்தியா, அமெரிக்கா ஒத்துழைப்பு

எரிசக்தி துறையில் மாற்றம்: இந்தியா, அமெரிக்கா ஒத்துழைப்பு

1 mins read
0c35915d-8076-4225-910b-c8e0f0f8ecc8
-

காந்திநகர்: இந்தியாவில் எரிசக்தித் துறையில் மாற்றம் கொண்டுவர அந்நாட்டுடன் அமெரிக்கா அணுக்கமாக பணியாற்றி வருவதாக அமெரிக்க நிதியமைச்சர் ஜெனட் எலன் தெரிவித்துள்ளார். இதை குறைவான நிதியுடன் தனியார் துறையிலிருந்து அதிக முதலீட்டைப் பெறும் வகையில் தளம் ஒன்றை அமைக்க இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக திருவாட்டி எலன் நேற்றுக் கூறினார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் உலகின் 20 பணக்கார நாடுகளின் அமைப்பான ஜி-20 மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டு நடவடிக்கைகளுக்கு இடையே திருவாட்டி எலனும் இந்திய நிதியமைச்சர் திருவாட்டி நிர்மலா சீதாராமனும் சந்தித்துப் பேசினர். அதில் இருவரும் பல பொருளியல் பிரச்சினைகள், குறிப்பாக, வர்த்தக, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் விநியோகச் சங்கிலித் தொடர் குறித்த அம்சங்கள் என்று திருவாட்டி எலன் விளக்கினார்.

“குறிப்பாக, இந்திய எரிசக்தித் துறையில் மாற்றத்தை வேகப்படுத்தி குறைந்த நிதியுடன் தனியார் துறை முதலீட்டுடன் அதற்கென ஒரு தளத்தை ஏற்படுத்துவது பற்றி சிந்தித்து வருகிறோம்,” என்று திருவாட்டி எலன் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு திருவாட்டி எலன் தற்பொழுது மேற்கொண்டுள்ள பயணம் இவ்வாண்டின் மூன்றாவது பயணமாகும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கத்தை புலப்படுத்துவதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நெருக்கம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தில் பிதிபலித்தது. இதன் விளைவாக தற்காப்பு, தொழில்நுட்பத் துறையில் இரு நாடுகளும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.