தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்திய அரசு: ஐந்து ஆண்டுகளில் 10% மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர்

1 mins read
685fc107-364f-44b5-b51b-762dc81683e2
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 10% மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். - கோப்புப்படம்: இபிஏ

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 135 மில்லியன் பேர், அதாவது ஏறத்தாழ மக்கள்தொகையில் 10 விழுக்காட்டினர் வறுமையிலிருந்து மீண்டுவிட்டனர் என்று மத்திய அரசின் அறிக்கை ஒன்று திங்கட்கிழமையன்று தெரிவித்தது.

இதில் கிராமப் பகுதிகளில் வாழ்வோரே அதிகமாக ஏழ்மை நிலையிலிருந்து மீண்டுள்ளதாக அந்த ஆய்வுத் தகவல் குறிப்பிடுகிறது. இந்த ஆய்வு ஊட்டச்சத்து இல்லாத உணவு, கல்வி, சுகாதாரம் போன்ற ஐநா அமைப்பு வகுத்துள்ள பல்நோக்கு வறுமைக் குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மூன்றும் மக்களுக்கு சென்றடையாத நிலையில் இருப்பவர்கள் வறுமையில் இருப்பதாகக் கொள்ளப்படுவர்.

“ஊட்டச்சத்தில் முன்னேற்றம், பல்லாண்டு பள்ளிக் கல்வி, சுகாதாரம், சமையல் எண்ணெய் போன்றவை வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களை மீட்டுள்ளது, “ என்று இந்திய அரசின் அறிவுஜீவிகள் அமைப்பான நிதிஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் சுமன் பெரி கூறுகிறார்.

இந்தியாவில் 2019ஆம் ஆண்டு 25 விழுக்காடாக இருந்த வறுமைக் கோட்டுக்கு [Ϟ]கீழே இருந்த மக்கள்தொகை எண்ணிக்கை 2021ஆம் ஆண்டு 15 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக தேசிய குடும்ப நலன் ஆய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி அரசாங்க அறிக்கை தெரிவிக்கிறது.

இத்துடன், சென்ற வாரம் யுஎன்டிபி என்ற ஐநா வளர்ச்சி அமைப்பு தனது அறிக்கையில், இந்தியாவில் பன்நோக்கு அடிப்படையில் வறுமைக் கோட்டிற்கு கீழிருப்பவர்களின் விகிதம் 2005ஆம் ஆண்டில் இருந்த 55 விழுக்காட்டிலிருந்து 2021ஆம் ஆண்டில் 16.4 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகக் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்