தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராஜஸ்தான்: கைப்பேசி வெடித்ததால் விமானம் தரையிறக்கம்

1 mins read
73cfc250-292c-46d8-9891-6bf6d1b53de6
படம்: - தமிழ் முரசு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் உதய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து ஏர்இந்தியா விமானம் டெல்லிக்குப் புறப்பட்டது.

அப்போது, பயணி வைத்திருந்த கைப்பேசி ஒன்று திடீரென வெடித்து, விமானத்திற்குள் புகை கிளம்பியதால் பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது.

அதையடுத்து விமானம் உடனடியாகத் தரை இறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 140 பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டு விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அனைத்துச் சோதனைகளுக்குப் பிறகு விமானம் தாமதமாக டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றது.

குறிப்புச் சொற்கள்