பெங்களூரு: கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் தாக்குதல் நடத்த சதி செய்ததாக ஜுனைத், சோஹைல், உமர், முதாஷிர், ஜாஹித் ஆகிய ஐவரை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்கள் வசம் இருந்த கைப்பேசிகள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஐவரிடத்திலும் விசாரணை நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதான ஐந்து பேரும் தெரிவித்துள்ள தகவலின்படி மேலும் ஐந்து பேர் தேடப்பட்டு வருவதாக மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட ஐந்து பேரும் கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைதாகி பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

