தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டுவிட்டர் பிரபலங்கள்

1 mins read
3783f3cf-2a8a-443c-8979-0c8329164fa3
டுவிட்டர் சமூகத்தளத்தில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களில் முதலிடத்தில் பிரதமர் மோடியும் (இடது), விராட் கோலி இரண்டாம் இடத்திலும் நடிகர் விஜய் (வலது) மூன்றாம் இடத்திலும் உள்ளனர். - படம்: இந்திய ஊடகம்

மும்பை: டுவிட்டர் சமூக வலைதளத்தில் ஜூன் மாதத்தில் அதிகம் பேசப்பட்ட இந்திய பிரபலங்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி இரண்டாம் இடத்திலும் நடிகர் விஜய் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

டுவிட்டர் ஒவ்வொரு மாதமும் அதிகம் பேசப்பட்ட கணக்குகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி அது சென்ற மாத விவரங்களை வெளியிட்டுள்ளது.

இந்திய காற்பந்து வீரர் சுனில் சேத்ரி நான்காவது இடத்திலும், யூடியூபர் ஃபுக்ரா இன்சான் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். இதில் ராகுல் காந்தி கடைசி இடத்தை பிடித்துள்ளார்.

ஜூன் மாதத்தில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியலில், பிரதமர் மோடி, விராட் கோலி, விஜய், ஃபுக்ரா இன்சான், சுனில் சேத்ரி, இந்திய காற்பந்து அணி, ஷாருக்கான், அல்லு அர்ஜுன், ரோகித் சர்மா, ராகுல் காந்தி ஆகியோர் இடம் பெற்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்