சமோலி: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டத்தில் இருக்கும் நமாமி கங்கை திட்ட வேலை இடத்தில் மின்மாற்றி (Transformer) வெடித்துச் சிதறியதில் 15 பேர் பலியாயினர்.
சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றின் கரையில் நமாமி கங்கை திட்டத் தளத்தில் பணிகள் நடந்து வருகின்றன.
அங்கு புதன்கிழமை 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தபோது திடீரென்று மின்மாற்றி வெடித்துச் சிதறியதில் மின்சாரம் பாய்ந்து 15 பேர் பலியாயினர் என்றும் மேலும் பலர் காயமடைந்துவிட்டனர் என்றும் அதிகாரிகள் கூறினர்.