2 கி.மீ. வரிசையில் நின்று தக்காளி வாங்கினர்

1 mins read
94f9b95c-7dac-4220-9605-bb2abdc0e971
கடப்பாவில் விவசாயி ஒருவர் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளியை ரூ.50க்கு விற்றார். இந்தத் தகவல் பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த தக்காளி வியாபாரியைச் சூழத் தொடங்கினர். - படம்: இந்திய ஊடகம்

கடப்பா: இந்தியாவில் தக்காளி விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் குறைந்த விலையில் தக்காளி விற்கப்பட்டதால் பொதுமக்கள் குவிந்தனர். சுமார் 2 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசையில் நின்று மக்கள் தக்காளியை வாங்கிச் சென்றனர்.

தக்காளி விலை ஆந்திர மாநிலத்தில் கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது.

கடப்பாவில் விவசாயி ஒருவர் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளியை ரூ.50க்கு விற்றார். இந்தத் தகவல் வேகமாகப் பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த தக்காளி வியாபாரியைச் சூழத் தொடங்கினர்.

காவல் துறையினர் வந்து மக்களை வரிசையில் நிற்கச் செய்து நெரிசலைக் கட்டுப்படுத்தினர். 2 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தலா 3 கிலோ தக்காளியை மக்கள் வாங்கிச் சென்றனர்.

இதனிடையே, நாடு முழுவதும் தக்காளி விலை குறையத் தொடங்குவதாக புதன்கிழமை தகவல்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்