தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகாராஷ்டிரா: நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

1 mins read
5f5a2905-db8e-4a8a-a11e-5cc2336b6def
 ராய்காட் மாவட்டத்தின் கலாபுரத்தில் நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புப்பணியாளர்கள். - படம்: ஏஎஃப்பி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ராய்காட் மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஆறு நதிகளில் சாவித்ரி, பதல்கனாக ஆகிய இரண்டில் வெள்ளம் அபாயக் கட்டத்தை தாண்டி கரைபுரண்டு ஓடுகிறது. குண்டலிகா, அம்பா நதிகளில் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளது.

இதனையடுத்து ராய்காட் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் கலாபுரம் என்னும் சிற்றூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 30க்கு மேற்பட்ட வீடுகள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை 25 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் 10 பேர் உயிரிழந்தனர் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கு மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும்.

நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணியில் உதவ நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

மும்பையில் கனமழை பெய்துவருவதைத் தொடர்ந்து அங்குள்ள கல்வி நிலையங்களுக்கு வியாழக்கிழமை விடுமுறை விடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்