சத்தீஸ்கர் காங்கிரஸ்ஆட்சி தப்பியது

2 mins read
e07c90a9-33af-47a2-a56c-af7ee4714f7c
முதல்வர் பூபேஷ் பாகேல், எதிர்க்கட்சியின் சொல்லும் செயலும் சரியில்லை என்று கூறினார். - படம்: கோப்புப் படம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், மாநில சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் பாரதிய ஜனதா கட்சியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இருந்து சனிக்கிழமை தப்பியது.

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஆட்சியில் ஊழல் நடைபெறுவதாகவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றைவில்லை எனவும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரடைந்து உள்ளதாகவும் கூறி காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. பாஜக 109 புகார்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

மன்றத்தில் வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கி 13 மணி நேரம் நடந்த விவாதத்துக்குப் பிறகு நள்ளிரவு 1 மணிக்கு மேல் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

சத்தீஸ்கர் சட்டமன்றத்தில் 90 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 71 உறுப்பினர்களும் பாஜகவுக்கு 13 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரி விதிப்பில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாக அண்மையில் புகார் எழுந்தது. அதன் தொடர்பான சட்ட விரோத பணப் பரிவர்த்தணை வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

நிலக்கரி வரி விதிப்பு முறைகேடு தொடர்பில் சத்தீஷ்கரில் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகள், அலுவலகங்களில் அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

பிலாய் என்ற தொகுதியின் எம்எல்ஏ தேவேந்திர யாதவ், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொருளாளர் ராம்கோபால் அகர்வால் உள்ளிட்டோருக்குச் சொந்தமான 12 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்புச் சொற்கள்