நீண்டகால முதல்வர் பதவி: நவீன் பட்நாயக் இரண்டாமிடம்

நீண்டகால முதல்வர் பதவி: நவீன் பட்நாயக் இரண்டாமிடம்

1 mins read
163b82ef-b84f-4108-ae4f-7b521c1ddb50
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் - படம்: இந்திய ஊடகம்

புவனேஸ்வர்: இந்தியாவில் நீண்ட காலமாக முதல்வர் பதவியை வகித்தவர்களின் பட்டியலில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் புதிதாக இணைந்து உள்ளார்.

ஆக அதிக காலம் முதல்வர் பதவியை வகித்தவர்களின் பட்டியலில் சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங் முதலிடத்தில் உள்ளார். 24 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அந்தப் பதவியில் இருந்தார்.

தற்போது 23 ஆண்டுகள் 139 நாள்கள் முதல்வர் பதவியில் இருக்கும் நவீன் பட்நாயக் அந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த இடத்தில் இருந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வா் ஜோதி பாசுவை அவா் முந்தியுள்ளாா்.

2000 மாா்ச் 5ஆம் தேதி முதல்முறையாக ஒடிசா முதல்வா் பதவியை ஏற்ற நவீன் பட்நாயக், தொடா்ச்சியாக ஐந்து தோ்தல்களில் வெற்றி பெற்று அந்தப் பதவியில் தொடர்கிறார்.

மேற்கு வங்க முன்னாள் முதல்வா் ஜோதி பாசு 1977 ஜூன் 21 முதல் 2000 நவம்பா் 5 வரை 23 ஆண்டுகள் 137 நாள்கள் முதல்வா் பதவியை வகித்துள்ளாா்.

தொடா்ந்து 5 தோ்தல்களில் வெற்றி பெற்ற முதல்வா்களின் பட்டியலில் பவன் குமாா் சாம்லிங், ஜோதி பாசுவைத் தொடா்ந்து நவீன் பட்நாயக் இடம்பெற்றுள்ளாா்.

2024 மக்களவைத் தோ்தலுடன் நடைபெற உள்ள ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் நவீன் பட்நாயக் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் நாட்டின் நீண்டகால முதல்வராக வரலாற்றில் அவர் இடம்பிடிப்பாா்.

குறிப்புச் சொற்கள்