லக்னோ- வாரணாசிக்கு ஆகஸ்ட் முதல் நேரடி விமான சேவை

லக்னோ- வாரணாசிக்கு ஆகஸ்ட் முதல் நேரடி விமான சேவை

1 mins read
de07d2ef-7bf7-4322-a662-c82d1806ac6a
வாரணாசி - படம்: இணையம்

புதுடெல்லி: இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களான வாரணாசிக்கும் லக்னோவுக்கும் இடையே ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் புதிய விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கவுள்ளது.

இதனால் இரு நகரங்களுக்கும் இடைப்பட்ட பயண நேரம் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோவில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்படும் விமானத்தின் பயண நேரம் 70 நிமிடங்கள். வாரணாசியில் இருந்து லக்னோவிற்கு திரும்பி வர 55 நிமிடங்கள் ஆகும். செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் விமான சேவை இயக்கப்படும். ஏற்கெனவே மும்பை துர்காபூர், மேற்குவங்கம் ஆகிய வழித்தடங்களை இணைக்கும் வகையில் புதிய விமான சேவையை இண்டிகோ நிறுவனம் அண்மையில் துவங்கியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்