ரு.10 கோடி வெளிநாட்டு நாணயம் பறிமுதல்

ரு.10 கோடி வெளிநாட்டு நாணயம் பறிமுதல்

1 mins read
ee4090eb-de8b-4813-8283-aef238f0e0e4
இந்தியாவில் உள்ள டெல்லி விமான நிலையங்களில் ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமான வெளிநாட்டு நாணயம் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.  - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்ட ஒரு விமானத்தில் ஏற முற்பட்ட மூன்று பேரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

அப்போது, பைக்குள் இருந்த காலணியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த US$7.2 லட்சம், 4,66,200 யூரோ ஆகியவற்றை (ரூ.10 கோடி) சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்தவர்கள் தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமான வெளிநாட்டு நாணயம் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்