மணிப்பூர் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் என்டிஏ, இண்டியா ஆர்ப்பாட்டம்

2 mins read
34310b41-68a6-4737-afc0-c73ac1788c9d
மணிப்பூர் மாநிலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பெண்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: திங்கட்கிழமை நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, என்டிஏ, இண்டியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திச் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்திற்குப் போட்டியாக பாரதிய ஜனதா கட்சியினரும் நாடாளுமன்ற வளாகக் காந்திச் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாஜகவின் அந்த ஆர்ப்பாட்டம் மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் கெலாட் முதலமைச்சராக இருக்கும் ராஜஸ்தான் மாநில அரசுக்கு எதிரான போராட்டம். அங்கு பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது எனவும் அதைக் கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரைன், ‘ரியாக்டிவ் மோடு’ நிலையில் பாரதிய ஜனதா கட்சி இருப்பதாகவும், மணிப்பூர் பாலியல் வன்கொடுமைப் பிரச்சினையைத் திசை திருப்பும் வகையில் “காப்பிகேட்” நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கப் பதிவில், “இண்டியா கூட்டணி சரியாகச் செயல்படுகின்றது என்பதற்கான அறிகுறி தென்படுகிறது,” என திரிணாமூல் காங்கிரசின் டெரிக் கூறியுள்ளார்.

மணிப்பூரில் நடந்த வன்கொடுமை தொடர்பாக எங்கள் கூட்டணி சார்பில் ஜூலை 24ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தோம். அதற்கு எதிர்வினையாக, எங்களை நகலெடுக்கும் விதமாக முந்திக்கொண்டு அவசரமாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் அடுத்த நாளும் மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இரு அவைகளிலும் பேச வேண்டும் எதிர்க்கட்சிகள் பதாகைகளை ஏந்தி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் முடங்கியது.

முன்னதாக, பிற்பகல் 2.30 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல ஆளுங்கட்சி உறுப்பினர்களும் விவாதிக்க விரும்புகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பிரதமர் பேச வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபடுகின்றனர். மணிப்பூர் விவகாரத்தில் உண்மை என்னவென்பது மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதால், அதுபற்றி விவாதிக்க வேண்டும்,” என்றார்.

இந்த நிலையில் திங்கட்கிழமை (ஜூலை.24) நாடாளுமன்றம் கூடியதும் மணிப்பூர் விவகாரம் குறித்து கேள்வி  எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகார அமளியால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. 

ர்.

குறிப்புச் சொற்கள்