தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அபாய நிலையில் யமுனை ஆற்றின் நீர்மட்டம்

1 mins read
5f36c362-025d-4573-8081-85546354fd36
டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.33 மீட்டராக உயர்ந்து மீண்டும் அபாய எல்லையைக் கடந்துள்ளது.  - ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.33 மீட்டராக உயர்ந்து மீண்டும் அபாய எல்லையைக் கடந்துள்ளது.

யமுனையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் வெள்ளம் போல் தண்ணீர் சூழும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் கேரான் செக்டார் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத்: ஜுனகத் மாவட்டத்தில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. அந்த மாவட்டத்தில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேரை மீட்புப்பணியாளர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உத்தரப் பிரதேசம்: முன்னூறுக்கும் மேற்பட்ட ஊர்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கங்கை, யமுனை ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அங்கே வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த தாழ்வான பகுதியில் இருந்து 25,281 பேர் மீட்கப்பட்டு அவர்கள் 61 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்