புதுடெல்லி: இந்தியாவின் அதிபராகத் திருவாட்டி திரவுபதி முர்மு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அவருக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி அதிபருக்கு டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.
பொதுச் சேவையில் அதிபர் முர்முவின் அயராத அர்ப்பணிப்பும் முன்னேற்றத்திற்கான அவரது இடைவிடாத நாட்டமும் மிகவும் ஊக்கமளிக்கின்றன என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதிபரின் பல்வேறு சாதனைகள் அவரது தலைமையின் உறுதியான தாக்கத்தை எதிரொளிக்கின்றன என்றும் திரு மோடி பதிவிட்டுள்ளார்.


