தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசு ஊழியருக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை; சிக்கிம் முதல்வர் அறிவிப்பு

1 mins read
84ae661f-62e4-4bfd-aea0-de1a3ff0a3d3
சிக்கிம் அரசாங்கம் அந்த மாநில அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறது என்று அந்த மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவித்து இருக்கிறார். - படம்: இந்திய ஊடகம்

சிக்கிம்: இந்தியாவின் சிக்கிம் மாநிலம், அரசு ஊழியருக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறைத் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தும் என்று அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவித்து இருக்கிறார்.

சிக்கிம் அரசாங்கச் சேவை அதிகாரிகள் சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பிள்ளைகளின் தந்தைக்கு ஒரு மாத விடுப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தையும் குழந்தைகளையும் நன்கு கவனித்துக் கொள்ள இந்தச் சட்டம் உதவும்.

இதன் தொடர்பிலான மேல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் பிரேம் சிங் அறிவித்து இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்