ஒரு கிலோ ரூ. 3 லட்சம்; மாம்பழ விற்பனையில் அசத்தும் ஆசிரியர்

ஒரு கிலோ ரூ. 3 லட்சம்; மாம்பழ விற்பனையில் அசத்தும் ஆசிரியர்

1 mins read
7faeea78-fbe6-4418-895b-4b74659932c7
உலகின் மிக விலை உயர்ந்த மா வகையைச் ஒடிசா ஆசிரியர் ஷ்சயாகர் போய் சாகுபடி செய்கிறார்.   - படம்: இந்திய ஊடகம்

புவனேஷ்வர்: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள காலஹந்தி மாவட்டத்தில் இருக்கும் கண்டுல்குடா கிராமத்தைச் சேர்ந்த ஷ்சயாகர் போய் என்ற ஆசிரியர் ஒரு கிலோ ரூ. 3 லட்சம் வரை விற்கப்படும் அரிய வகை மியாசகி மாம்பழத்தைச் சாகுபடி செய்து அனைத்துலகச் சந்தையில் பெரும் லாபம் ஈட்டி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

அந்த மாம்பழத்தின் வெளிப்பக்கம் செந்நிறமாக இருக்கிறது. அதன் பிறப்பிடம் ஜப்பான். தனித்துவமிக்க சுவையும் மருத்துவ குணங்களும் கொண்ட அந்த வகை மாம்பழத்தை தனது சொந்த தோட்டத்தில் பயிர் செய்து அந்த ஆசிரியர் புரட்சியைக் கிளப்பி இருக்கிறார்.

அந்த மாம்பழத்தின் தேவையை உணர்ந்துகொண்ட ஒடிசா மாநில விவசாயிகள் பலரும் அதை தங்கள் தோட்டத்தில் பயிரிட்டு வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்