கியான்வாபி பள்ளிவாசலில் ஆய்வு செய்ய ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை தடை

கியான்வாபி பள்ளிவாசலில் ஆய்வு செய்ய ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை தடை

1 mins read
5cb09486-62f1-452d-bbdb-af7228ac3217
கியான்வாபி பள்ளிவாசல். - கோப்புப்படம்: ஊடகம்

பிரயாக்ராஜ்: கியான்வாபி பள்ளிவாசலில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அப்பள்ளிவாசலில் களஆய்வை மேற்கொண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனை எதிர்த்து பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுகுறித்த விசாரணையில் ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் ஜூலை 26ஆம் தேதி தடை விதித்தது.

இந்நிலையில் பள்ளிவாசல் நிர்வாகம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகியது. அந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ஆகஸ்ட் 3ஆம் தேதி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். அதுவரை பள்ளிவாசலில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவு தொடரும் என்று தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்