22வது மாடியிலிருந்து பூனையை வீசி எறிந்த சிறுவனின் மறுவாழ்வுத் திட்டம் நிறைவு

பூன் லேயில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தின் 22வது மாடியிலிருந்து வயதான பூனையை வீசியெறிந்த 10 வயது சிறுவன், ஜூன் மாதத்தில் ஒரு மாதகால வழிகாட்டல் திட்டத்தைப் பூர்த்தி செய்திருக்கிறான். அவனுக்கு விலங்குநல மருத்துவச் சேவை கடுமையான எச்சரிக்கை விடுத்தது. 

தேசிய பூங்காக் கழகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) இணையம்வழி நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இவ்விவரம் வெளியிடப்பட்டது. 

கழகத்தின் ஒரு பிரிவான விலங்குநல மருத்துவச் சேவையின் குழு இயக்குநர் ஜெசிக்கா குவோக், பூனை வீசப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை முடிவடைந்தவுடன், சிறுவனை மனநல மருத்துவர் பரிசோதித்ததாகத் தெரிவித்தார். 

சென்ற ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி, புளோக் 186ன் 22வது மாடியிலிருந்து சிறுவன் பூனையை வீசியெறியும் காட்சி CCTV கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த ஒரு நிமிடக் காணொளி மறுநாள் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது. 

மின்தூக்கியிலிருந்து பூனை வெளியே வருவதும், அதற்குப் பின்னால் சிறுவன் வருவதும் காணொளியில் தெரிந்தது. சில விநாடிகளுக்குப் பிறகு, சிறுவன் பூனையைக் கையில் எடுத்து, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, கீழே வீசி எறிந்தான். அந்தச் சமூகப் பூனைக்கு உணவளித்துவந்த 39 வயது திருவாட்டி உமி சொலிகடி, பூனையின் சடலத்தைக் கட்டடக் கீழ்த்தளத்தில் பின்னர் கண்டெடுத்தார். 

இச்சம்பவத்தைப் பற்றி காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால், சிறுவன் கைது செய்யப்படவோ காவலில் வைக்கப்படவோ இல்லை. 

சிங்கப்பூரில் குற்றப் பொறுப்பேற்புக்கான குறைந்தபட்ச வயது பத்து. அந்த வயதுக்குக் குறைவான பிள்ளைகள் செய்யும் எதையும் குற்றமாகக் கருதமுடியாது. 

பத்து வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைக்கு தனது செயலின் விளைவுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய மனமுதிர்ச்சி இருக்காது. 

“சிறுவனுக்குத் தனது செயலின் இயல்பையும் விளைவுகளையும் புரிந்துகொள்ளக்கூடிய மனமுதிர்ச்சி இல்லை என்பதை மனநல மருத்துவமனையின் மனோவியல் மருத்துவர் உறுதி செய்தார்,” என திருவாட்டி குவோக் தெரிவித்தார். 

இந்நிலையில், சிறுவனை விலங்குநல மருத்துவச் சேவையின் திசைதிருப்பும் திட்டத்தில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டது. விலங்குநலன், விலங்குகளின் பராமரிப்பு போன்றவற்றைச் சிறுவன் புரிந்துகொள்ளவும், அவனது செயலில் தவறு என்ன என்பதை உணரவும் இந்த மறுவாழ்வுத் திட்டம் பொருத்தமானதாகக் கருதப்பட்டது. 

பூனை காப்பகத்தில் பூனைகளைப் பராமரிக்கும் நடவடிக்கைகளிலும் சிறுவன் ஈடுபடுத்தப்பட்டான். ஜூன் மாதப் பள்ளி விடுமுறையில் சிறுவன் திட்டத்தைப் பூர்த்தி செய்தான். பூனையின் பராமரிப்பாளர்களிடம் சிறுவன் மன்னிப்பு கூற விரும்பியதாகவும் திருவாட்டி குவோக் தெரிவித்தார். 

சிறுவனுக்குக் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அவனது பள்ளி, பெற்றோர் ஆகியோருடன் சேர்ந்து விலங்குநல மருத்துவச் சேவை சிறுவனின் நடத்தையைத் தொடர்ந்து கண்காணிக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!