திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்காக நடமாடும் ஓய்வறைகள்

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்காக நடமாடும் ஓய்வறைகள்

1 mins read
b1408098-2269-45cd-b763-f7ea687452e0
அடுக்கு படுக்கைகள். - படம்: இந்திய ஊடகம்

திருப்பதி: பக்தர்கள் கூட்டம் அலைமோதும்போது தற்காலிகமாக தங்குவதற்கு கொள்கலன் போன்ற இரண்டு நடமாடும் ஓய்வறைகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டு உள்ளன.

அதில் ஒன்று திருமலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானத்தின் வாகன ஓட்டுநர்கள் இரவில் தங்குமிடமாக அது ஒதுக்கப்பட உள்ளது.

மற்றொரு நடமாடும் ஓய்வறையில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்கலாம்.

இந்த நடமாடும் ஓய்வறையில் ஒரே நேரத்தில் 12 பேர் வரை தங்கும் வகையில் படுக்கைகள், குளியல் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது திருப்பதியில் உள்ள பல்வேறு இடங்களில் இதுபோன்ற ஓய்வறைகளை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பதி கோவில் பகுதிகளில் அறைகள் குறைவாக உள்ளன. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அதிக ஓய்வு இல்லங்கள் கட்ட வனத்துறை அனுமதி இல்லை என்பதால் அவ்வப்போது மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்