மும்பை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், பகுதிநேர வேலை பார்த்து வந்த 15 வயதுப் பள்ளிச் சிறுமிக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த ஆடவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி சிறுமியிடம் திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி கடத்திச்சென்று விட்டார். அந்தச் சிறுமியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.
நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் 9 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், ஆடவர் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த ஆடவருக்கு நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.