டெல்லி அவசர சட்ட மசோதா - எதிர்த்து வாக்களிக்க ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் தீவிர ஏற்பாடு

1 mins read
f7a7b2bf-4c99-43c2-80cd-8b027babe217
புதுடெல்லி அவசர சட்ட மாசோதாவை எதிர்ப்பதில் இண்டியா கூட்டணிக் கட்சிகள் உறுதியாக உள்ளன. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லி அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்ட மாசோதாவை எதிர்ப்பதில் இண்டியா கூட்டணிக் கட்சிகள் உறுதியாக உள்ளன. எனவே, அந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது இண்டியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் மசோதாவை எதிர்த்து வாக்களிப்பதற்கு வசதியாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் உறுப்பினர்கள் அனைவரும் அன்றைய நாள் தவறாது அவைக்கு வரவேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளன.

நோய்வாய்ப்பட்டுள்ள மற்றும் நடக்க இயலாத மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வர மருத்துவ வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தியா கூட்டணியில் கிட்டத்தட்ட 109 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் கபில்சிபல் போன்ற ஓரிரு சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவும் இந்தக் கூட்டணிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த மசோதாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் கலந்துகொண்டால் எதிர்க்கட்சிகளின் வியூகம் வெற்றிபெற 120 பேரின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்