தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துபாயில் பெரும்பரிசை வென்ற இந்தியத் தொழிலாளர்

1 mins read
1ec3d9c0-0ca0-48ba-9218-9f394ce5c2cd
முகமது அலி கான், அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் கிட்டத்தட்ட 5.5 லட்ச ரூபாயைப் பரிசாகப் பெறுவார். - படம்: இணையம்

துபாய்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது அலி கான். கட்டடக்கலை வல்லுநரான அவர் துபாயில் உள்ள சொத்துச் சந்தை நிறுவனத்தில் உள்அலங்கார ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் புதிதாக அறிமுகம் செய்துள்ள ‘ஃபாஸ்ட் 5 மெகா டிரா’ எனும் பெரும் பரிசை கான் வென்றுள்ளார்.

அதனால், அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 25,000 திராம் ($9,058) பரிசுத் தொகை அவருக்கு வழங்கப்படும். இந்திய ரூபாயில் அதன் மதிப்பு 5.5 லட்ச ரூபாய்க்கு மேல் எனத் தெரிகிறது.

திரு கான் வெற்றிபெற்ற தகவல், வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக ‘கல்ஃப் நியூஸ்’ நாளிதழ் கூறியுள்ளது.

பரிசு கிடைத்தது குறித்து வியப்பும் மகிழ்ச்சியும் தெரிவித்த கான், தனக்கு மிக அவசியமான நேரத்தில் இப்பரிசு கிடைத்திருப்பதாகக் கூறினார்.

“பரிசு கிடைத்தது குறித்து நான் கூறியபோது என் குடும்பத்தினரால் அதை நம்பவே இயலவில்லை. எதற்கும் அதன் நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கச் சொன்னார்கள்,” என்றார் திரு கான்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்