புதுடெல்லி: இந்தியா இதுவரை 10 லட்சம் கிலோ போதைப் பொருளை அழித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார். அவர் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார்.
“மக்கள் போதைப் பழக்கங்களைக் கைவிட்டு உடலைப் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்தியா 10 லட்சம் கிலோ போதைப் பொருட்களை அழித்துள்ளது,” என்று அவர் கூறினார்.
இந்தியா ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சூழலில் நாம் வீடுதோறும் தேசியக் கொடி பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து எல்லா வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவோம்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

