ஆந்திரா சண்டைக் கோழியை ரூ.3 லட்சம் கொடுத்து வாங்கிய தாய்லாந்து நாட்டினர்

ஆந்திரா சண்டைக் கோழியை ரூ.3 லட்சம் கொடுத்து வாங்கிய தாய்லாந்து நாட்டினர்

1 mins read
d6b2ad3b-a3fd-4cc6-9658-fb958f2c8e5d
ரத்தைய்யா என்பவர் வளர்த்த சேவல், கனபவரம் என்னும் ஊரில் நடந்த பந்தயத்தில் கலந்து கொண்டு ரூ.27 லட்சம் பரிசுத் தொகையை வென்றது. - படம்: இந்திய ஊடகம் 

கோதாவரி: ஆந்திராவில் கோதாவரி மாவட்டம் ஏலூரு பகுதியில் உள்ள ரங்காபுரம் என்ற ஊரில் ரத்தைய்யா என்பவர் பந்தய சேவல்களை வளர்த்து வருகிறார்.

பாதம், முந்திரி, முட்டை, புரதச்சத்துக்கள், வைட்டமின் மாத்திரைகள் கொடுத்து சேவல்களைச் சண்டைக்கு பழக்கப்படுத்துகிறார்.

ரத்தைய்யா வளர்த்த சேவல் கடந்த ஆண்டு போகிப் பண்டிகையன்று கனபவரம் என்னும் ஊரில் நடந்த பந்தயத்தில் கலந்து கொண்டு ரூ.27 லட்சம் பரிசுத் தொகையை வென்றது. அந்தப் பந்தயத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

தாய்லாந்திலும் அதற்குப் பேராதரவு கிடைத்தது. இந்த நிலையில் ஆந்திராவில் ரத்தைய்யா வளர்த்து வரும் பந்தய சேவல்களை வாங்க தாய்லாந்தில் இருந்து நால்வர் வந்தனர்.

அவர்கள் ரத்தைய்யாவை அணுகி ரூ.27 லட்சம் பரிசுத் தொகையை வென்ற சேவலை விலைக்குக் கேட்டனர். ஆனால் ரத்தைய்யா மறுத்துவிட்டார்.

இருந்தாலும் ரூ.3 லட்சம் கொடுத்து மற்றொரு பந்தய சேவலை அவர்கள் வாங்கிச் சென்றதாக ரத்தைய்யா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டு