புதுடெல்லி: மணிப்பூர் சென்று திரும்பிய எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள் குழு திங்கட்கிழமை நாடாளுமன்றக் கட்டடத்தில், கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் கள நிலவரம் குறித்து விளக்கினர்.
இந்தக் கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, டி.ஆர். பாலு, திருமாவளவன், கனிமொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் குறித்து, விவாதம் நடத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆறு கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணியின் 21 எம்.பி.க்கள் ஜூலை 29, 30 தேதிகளில் மணிப்பூருக்குச் சென்று, அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிலைமையை ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

