திருவனந்தபுரம்: ஆசிரமத்தில் தங்கியிருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இந்தியாவில் கேரள மாநிலம், கொல்லம் அருகேயுள்ள ஒரு கடற்கரையில் கடந்த திங்கட்கிழமை அந்த 44 வயதுப் பெண் அமர்ந்திருந்தார்.
அப்போது அப்பெண்ணை நெருங்கிய ஆடவர் இருவர், அவருக்கு சிகரெட் தருவதாகக் கூறினர். ஆனால், அவர் ‘வேண்டாம்’ என மறுத்துவிட்டார்.
ஆனாலும், அவருடன் நட்பாகப் பேசிய அவ்விருவரும் அவரிடம் ஒரு மதுப்புட்டியைக் காட்டினர். பின்னர் அவர்கள் மூவரும் அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்று மது அருந்தினர். அதனைத் தொடர்ந்து, அப்பெண் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட்டார்.
கண்விழித்துப் பார்த்த பிறகே தாம் பாலியல் ரீதியாகச் சீரழிக்கப்பட்டதை அவர் உணர்ந்தார். அதுபற்றி அவர் ஆசிரம அதிகாரிகளிடம் கூற, பின்னர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
களத்தில் இறங்கிய காவல்துறை அப்பகுதியைச் சேர்ந்த நிகில், ஜெயன் என்ற இருவரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.