தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘2,000 ரூபாய் தாள்கள் 8‌8 விழுக்காடு திரும்பப் பெறப்பட்டுவிட்டன’

1 mins read
0ec55280-5de2-493f-b406-5d4623a16628
படம்: - இந்திய ஊடகம்

புதுடெல்லி:  இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் தாள்கள் கிட்டத்தட்ட 88 விழுக்காடு திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக அந்நாட்டின் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19ஆம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்படும் என அறிவித்தது. 

மே மாதம் 23ஆம் தேதியிலிருந்து 2,000 ரூபாய் தாள்களை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. 

2023 செப்டம்பர் 30ஆம் தேதிவரை 2,000 ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்படும். 

அறிவிப்பு வெளியான நாளில் இருந்து புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் தாள்களில் ஏறக்குறைய 75 விழுக்காடு திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில், ஜூலை 31ஆம் தேதி வரை ரூ.3.14 லட்சம் கோடி 2,000 ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

கடந்த 2018 - 2019ஆம் ஆண்டு முதல் 2,000 ரூபாய் தாள்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்