முடிவெட்ட சென்று மொட்டை தலையாக திரும்பிய பெண்

1 mins read
c3c05f1f-51a9-42c7-bb3d-0fec0db1b59d
படம்: - தமிழ் முரச

திருப்பதி: தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் ஓல்ட் சிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது அழகான கூந்தலை, கணவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஸ்டைலாக வெட்டுவதற்காக அபிட்ஸ் பகுதியில் உள்ள பியூட்டி பார்லருக்குச் சென்றார்.

அங்கிருந்த அழகுக்கலை நிபுணர் அந்தப் பெண்ணின் தலைமுடிக்கு ஒருவித எண்ணெய் தடவி முடியை வெட்டினார். ஆனால் எண்ணெய் தடவிய உடன் முடி கொட்ட ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் உச்சந்தலையில் இருந்த முடிகள் அனைத்தும் உதிர்ந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் வீட்டிற்கு ஓடினார்.

வீட்டில் இருந்த கணவர் மனைவியின் தலையில் முடி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தனது தலையில் இருந்து உதிர்ந்த தலைமுடியை கையில் எடுத்துக்கொண்டு காவல்துறையில் புகார் அளித்தார்.

குறிப்புச் சொற்கள்