ராகுலுக்கு விருந்தளித்து மகிழ்ந்த லாலு

ராகுலுக்கு விருந்தளித்து மகிழ்ந்த லாலு

1 mins read
9b1c707b-d953-4c93-bfe4-ad2a168a391e
இந்த விருந்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மலர் பூங்கொத்து கொடுத்து கட்டி அணைத்து லாலு வரவேற்றார். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கைது நடவடிக்கைக்கு தடை விதித்த நிலையில் அவருக்கு விருந்தளித்து மகிழ்ந்தார் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ். இந்த விருந்து நிகழ்ச்சி வியாழக்கிழமை டெல்லி அரசு குடியிருப்பில் உள்ள லாலு மகள் மிசா பாரதியின் வீட்டில் நடைபெற்றது.

மோடி பெயர் அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு குஜராத் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனைக்கு நேற்று உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த மகிழ்வைக் கொண்டாட ராகுல் காந்திக்கு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு விருந்தளித்தார்.

இந்த விருந்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மலர் பூங்கொத்து கொடுத்து கட்டி அணைத்து லாலு வரவேற்றார்.

இந்த விருந்தில் பீகாரின் புகழ்பெற்ற மேற்கு சம்பாரன் பகுதியின் ஆட்டிறைச்சியின் சிறப்பு உணவு பறிமாறப்பட்டது. இதற்கு அந்த ஆட்டிறைச்சியை பீகாரிலிருந்து விமானத்தில் லாலு வரவழைத்திருந்தார். இந்த விருந்தில் லாலுவின் இளைய மகனும் பீகாரின் துணை முதல்வருமான தேஜஸ்வீ பிரசாத் யாதவும் கலந்து கொண்டார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இண்டியா’வின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. இச்சூழலில் ராகுலுக்கு கிடைத்த நீதிமன்றத் தடை, மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர்களை உற்சாகப்படுத்தும் இந்த உத்தரவை வியாழக்கிழமை லாலுவுடன் கொண்டாடினார் ராகுல். இந்த விருந்துக்குப் பின் அனைவரும் அரசியல் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்