ஒரே நாளில் மும்முறை நிலநடுக்கம்

1 mins read
b21f4634-aafd-491b-8acd-ea826893f70d
படம்: - தமிழ் முரசு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. சனிக்கிழமை மாலை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சேதம் குறித்த விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

சனிக்கிழமை இரவு 9.31 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பாகிஸ்தான் மற்றும் இந்து குஷ் பகுதியில் சனிக்கிழமை காலை 8.36 மற்றும் 10.24 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த வரிசையில் இரண்டு நிலநடுக்கங்களும் 4.8 மற்றும் 5.2 ரிக்டர் அளவில் பதிவானது.

குறிப்புச் சொற்கள்