நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான்- 3

நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான்- 3

1 mins read
f3438246-ed4d-4bad-8e5c-a0b19dfd1b9a
சந்திராயன்-3 - கோப்புப்படம்: ஊடகம்

ஸ்ரீஹரிகோட்டா: கடந்த ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது.

இந்நிலையில், அந்த விண்கலம் புவி வட்டப் பாதையில் இருந்து இப்போது நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. புவியைச் சுற்றி வந்த விண்கலம், நிலவைச் சுற்றத் தொடங்கியது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்- 3 இம்மாத இறுதிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சந்திரயான்-3 செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஞாயிறு இரவு 11 மணிக்கு சுற்றுவட்டப்பாதையை குறைப்பதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. சந்திரயான்-3 இம்மாத இறுதியில் நிலவைச் சென்றடையும் என இஸ்ரோ ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.