சென்னை: என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 ஆயிரத்துக்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில், நிலமே வழங்காத வடஇந்தியர்களுக்கு என்எல்சி வேலை வழங்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான தகவல்களை வழங்க மறுப்பது ஏன்? இதன் பின்னணியில் ஊழலும், முறைகேடுகளும் நடந்துள்ளனவா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்”, என்று அவர் கூறியுள்ளார்.
அன்புமணியின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் என்எல்சி நிறுவனம், “வடஇந்தியர்களுக்கான வேலை நேரடியாக வழங்கப்படவில்லை. கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட பரிந்துரைப்பட்டியலின் அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்திருக்கிறது.
அண்மையில் என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாமக சார்பில் நெய்வேலியில் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது வன்முறை வெடித்ததை அடுத்து அன்புமணி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.