மணிப்பூர் விவகாரத்தைக் கவனிக்க பெண் நீதிபதிகள் குழு

1 mins read
1d29fb6c-63bd-43e4-b7fa-ac381e653295
மணிப்பூர் மாநிலக் கலவரத்தில் இறந்த குக்கி இனத்தவரை ஒன்றாகப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து இம்மாதம் 3ஆம் தேதி இடம்பெற்ற போராட்டம். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் மனிதாபிமான அம்சங்களை மேற்பார்வையிட 3 முன்னாள் உயர் நீதிமன்ற பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

ஜம்மு & காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழுவில் மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஷாலினி பன்சலார் ஜோஷி மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழு மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசாரிப்பதோடு அவர்களுக்குத் தேவையான மறுவாழ்வு நடவடிக்கைகளை மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்