இந்தியாவின் தேசிய விலங்கு புலிதான், பசு அன்று!

இந்தியாவின் தேசிய விலங்கு புலிதான், பசு அன்று!

1 mins read
1a74fe05-ab80-43fe-87fd-046ed76c0e31
பாஜக உறுப்பினரின் கேள்விக்கு விளக்கம் அளித்த இந்திய அமைச்சர் ஜி. கிருஷ்ண ரெட்டி. - படம்: டுவிட்டர் 

புதுடெல்லி: இந்தியாவின் தேசிய விலங்கு புலிதான் என்றும் பசுவை தேசிய விலங்காக அங்கீகரிக்கும் எண்ணம் இந்திய அரசுக்கு இல்லை என்றும் திங்கட்கிழமை தெளிவுபட தெரிவிக்கப்பட்டது.

ஆஜ்மிர் பகிராத் சவுத்ரி என்ற நாடாளுமன்ற பாஜக உறுப்பினர் மன்றத்தில் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.

அதற்கு மத்திய அமைச்சர் ஜி. கிருஷ்ணன் ரெட்டி பதிலளித்துப் பேசினார்.

இந்தியக் கலாசாரத்தின் மிக முக்கிய அம்சமாக பசு இருக்கிறது. ஆகையால், அதை தேசிய விலங்காக அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அந்த உறுப்பினர், இதன் தொடர்பில் அரசாங்கத்தின் நிலையைத் தான் தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதையே பாஜகவின் இதர பல உறுப்பினர்களும் பிரதிபலித்தனர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், “இந்திய அரசாங்கம் புலியை தேசிய விலங்காகவும் மயிலை தேசியப் பறவையாகவும் அங்கீகரித்து இருக்கிறது. இதில் இதுவரையில் எந்த மாற்றமும் இல்லை,” என்று குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்