கெஜ்ரிவால்: நீதிமன்ற உத்தரவை பிரதமர் மோடி மதிக்கவில்லை

கெஜ்ரிவால்: நீதிமன்ற உத்தரவை பிரதமர் மோடி மதிக்கவில்லை

கோப்புப்படம்: ஊடகம்

08 Aug 2023 - 7:58 pm

2 mins read

புதுடெல்லி: மக்களவை மற்றும் மாநிலங்களவையில் டெல்லி சேவை மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா குறித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு தலையிடக்கூடாது என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பிரதமர் மோடி மதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றுவதிலும் புதிதாக நியமனம் செய்வதிலும் துணைநிலை ஆளுநருக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்ற வகையில் மத்திய அரசு உருவாக்கியுள்ள மசோதா கடந்த 3ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து மாநிலங்கலங்களவையில் அந்த மசோதா திங்கட்கிழமை இரவு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மசோதாவுக்கு ஆம்ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும் எதிராக 102 வாக்குகளும் பதிவாகியுள்ளது. பின்னர் 8 மணி நேரம் அதுகுறித்த விவாதம் நடந்தபின் மசோதா நிறைவேற்றப்பட்டது.

சட்டங்களை இயற்றும் அதிகாரம் எங்களிடம் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். மக்களுக்காக உழைக்கத்தான் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது; அவர்களின் உரிமைகளைப் பறிக்க அல்ல.

ஆம் ஆத்மிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி நான்கு கருத்துக் கணிப்புகளில் தோல்வியடைந்தது. அவர்கள் புறவாசல் வழியாக டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முயலுகின்றனர். இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ‘கறுப்பு நாள்’ என கெஜ்ரிவால் சாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
அரசியல்