இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வியாழக்கிழமை முதல் பள்ளிகள் கட்டம்கட்டமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களாக செயல்படும் 28 பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை.
அம்மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் பழங்குடியின மக்கள் இடையே ஏற்பட்ட பிரிவினைவாதம் காரணமாக கலவரங்கள் ஏற்பட்டன.
அதன் காரணமாக மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் பள்ளிகள் செயல்படவில்லை.
அங்கு இன்னும் பதற்றமான சூழல் நிலவுகிறது. பல ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படை, காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் பலமுறை பள்ளிகள் திறப்பதற்காக எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
அதன் பின்னர் அம்மாநில பள்ளி கல்வித் துறை ஆகஸ்ட் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என உத்தரவு பிறப்பித்து தற்போது பள்ளிகளைத் திறந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மணிப்பூரில் மீண்டும் அமைதி நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.