ஸ்ரீநகர்: ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரை அமர்நாத் யாத்திரை புதன்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது நிலைமை மேம்பட்டதால் வியாழக்கிழமை முதல் யாத்திரை மீண்டும் தொடங்கியது.
அமர்நாத் யாத்திரை ஜூலை 1ஆம்தேதி தொடங்கியது. 62 நாள் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31ஆம் தேதி நிறைவடைகிறது.
அமர்நாத் யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
யாத்திரையின் போது எந்த பாதுகாப்புக் குறைபாடுகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக பாதுகாப்புப் படையினர் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டிற்கான யாத்திரை முடிய இன்னும் மூன்று வாரங்களே உள்ளதால் மேலும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வழிபட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.