தந்தைக்கு மனைவியாக நடித்து மகள் மோசடி

தந்தைக்கு மனைவியாக நடித்து மகள் மோசடி

தமிழ் முரசு

10 Aug 2023 - 8:33 pm

1 mins read

ஆக்ரா: காலமான தமது தந்தைக்கு மனைவியாக நடித்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக குடும்ப ஓய்வூதியம் பெற்று மோசடி செய்துள்ளார் 36 வயது மோசினா பர்வேஸ்.

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வஜாஹத் உல்லா கான். அவர் வருவாய்த் துறையில் பணியாற்றினார். அவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் காலமானார். அவருக்கு முன்னதாக அவரது மனைவி சபியா பேகம் மாண்டார்.

இந்நிலையில் கானின் மகள் மோசினா, தனது இறந்த தந்தையின் மனைவி எனக் கூறி ஓய்வூதியம் பெற்றுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு பரூக் அலி என்பவரை மோசினா திருமணம் செய்துள்ளார். தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதனால் மோசினாவின் மோசடியை பரூக் அலி காவல்துறையிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் மோசினாவை கைது செய்தனர். மோசினா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்